Can apply for first year admission for engineering College; Perambalur Collector V. Santha
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்:
2020-2021 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பொறியியல் பட்டப்படிப்பிற்கான முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இணையதளம் மூலம், விண்ணப்ப பதிவு 15.07.2020 முதல் 16.08.2020 காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.
இணையதள விண்ணப்ப பதிவு பங்கேற்கும் மாணவ – மாணவியர்கள் அனைவரும் 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் , மேல்நிலை வகுப்பிற்கான தேர்வு நுழைவுச் சீட்டு, மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதி சான்றிதழ், பெற்றோரின் மாத வருமானச் சான்றிதழ் , இருப்பிடச் சான்றிதழ் சிறப்பு விளையாட்டுச் சான்று மற்றும் அதற்கு இணையான சான்றிதழ், சிறப்பு முன்னாள் இராணுவத்தினர் சான்று மற்றும் அதற்கு இணையான சான்றிதழ்கள் ஏதேனும் இருப்பின் மாற்றுத்திறனாளி சான்று மற்றும் அதற்கு இணையான சான்றிதழ் ஏதேனும் இருப்பின் ஆகிய சான்றிதழ்களை எடுத்து வரவேண்டும்.
மேலும், இதுகுறித்த தகவல்களுக்கு 04328 – 243200 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு மாணவர்கள் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.