பத்ம விபூசன், பத்ம பூசன், மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் ; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2024-06-11 | 14:16h
update
2024-06-11 | 14:16h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Can apply for Padma Vibhusan, Padma Bhusan, and Padma Shri awards; Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2025ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் (பத்ம விபூசன், பத்ம பூசன், மற்றும் பத்ம ஸ்ரீ) வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இவ்விருதுகள் தொழில், இனம், உத்யோகம், பாலினம் ஆகியவற்றிற்கு வித்யாசமின்றி வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விளையாட்டுக்களில் சாதனை புரிந்தவர்கள் https://awards.gov.in மற்றும் https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 25.06.2024 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். (இணையதளம் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்),

மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அவர்களை 74017 03516 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.08.2026 - 21:28:43
Privacy-Data & cookie usage: