தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

schedule
2017-10-28 | 01:57h
update
2026-07-04 | 02:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

can apply to the award of the Periyar Award for the social justice

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ளள தகவல்:

ஒவ்வொரு ஆண்டும், சமூக நீதிக்காக பாடுபவர்களை சிறப்பு செய்வதற்காக ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.1. லட்சம் (மட்டும்), பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் 2017-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின், சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப்பட உள்ளது.

எனவே சமூக நீதிக்காக பாடுபட்டவர்கள் அவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி மேம்பாடு அடைய மேற்கொண்ட முயற்சிகள், அம்மக்களின் வாழ்க்கைத்தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள், கடந்த ஆண்டுகளில் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் அவர்களது பெயர், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன் 10.11.2017-க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 02:26:45
Privacy-Data & cookie usage: