சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிக்கான நேர்காணல் ரத்து; நாமக்கல் கலெக்டர் அறிவிப்பு

schedule
2018-12-19 | 14:39h
update
2026-04-17 | 23:41h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cancellation of interviewing Nutrition organizer and assistant work; Namakkal Collector Report

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள தகவல்:

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சத்துணவுத் திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்கள் இன சுழற்சி முறையில் நிரப்ப அரசால் உத்தரவிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 142 அமைப்பாளர்கள் மற்றும் 572 சமையல் உதவியாளர்கள் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

Advertisement

இப்பணியிடங்களுக்கான நேர்காணல் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் முறையே கடந்த ஆகஸ்ட் 23 மற்றும் 24 ஆகிய தேதி நாட்களில் நடைபெற்றது. அதன்தொடர்ச்சியாக இப்பணிநியமனங்கள் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது மற்றும் நேர்காணல் ஆகியவை பல்வேறு நிர்வாகக்காரணங்களினால் ரத்து செய்யப்படுகிறது. மேலும் இப்பணி நியமனங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான அறிவிப்பு பின்னர் தனியே வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
17.04.2026 - 23:42:03
Privacy-Data & cookie usage: