பெரம்பலூர் அருகே கார்

பைக் மோதலில், தீ பிடித்தது; 2 குழந்தைகள் தீக்காயம்! ஒருவர் பலி!!

schedule
2021-08-01 | 11:51h
update
2021-08-01 | 13:21h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car-bike collision near Perambalur; 2 children burn! One killed !!

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புனிதன், இவர் இன்று காரில் சென்னையில் இருந்து திருச்சியை நோக்கி, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கார் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் உள்ள காரை பிரிவு சாலையை கடக்க முயன்ற போது, பைக்கில் ஒருவர் 2 குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, காரும் பைக்கும் மோதிக் கொண்டதில், காரின் வலது பக்க டயர் தீப்பிடித்தது. காரில் இருந்த தீ பைக்கிற்கும் பரவியது. உடனே காரில் இருந்த வழக்கறிஞர் புனிதன், அவருடைய கார் ஓட்டுனர் தப்பி வெளியேறினர்.

Advertisement

பைக்கை ஓட்டி வந்த நபருக்கு காலில் காயமும், அவருடன் வந்த இரு குழந்தைகளுக்கு உடலில் தீக்காயமும், ஏற்பட்டது. இது குறித்து போக்குவரத்து சுற்றுக் காவலர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, சிகிச்சைக்காக காரை மருத்துவமனையில் அனுமதித்தனர், 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார் நடத்திய விசாரணையில், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் லாடபுரத்தை சேர்ந்த பெரியசாமி என்பதும், அவருடன் வந்தது அவரது மகன் செந்தில்குமாரின் குழந்தைகள் அஜீத், பரணி என்பதும் தெரியவந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சையின் போது உயிரிழந்தார். குழந்தைகள் அஜுத் , பரணிதரன் ஆகியோர் மேல் சிசிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இந்த விபத்தால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரின் உரிமையாளர் புனிதனுடைய ஒரு லட்ச ரூபாய் பணம் மற்றும் ஐபோன் மேலும் இரண்டு போன் அவருடைய வாகனத்தின் சான்றுகள் மற்றுமொரு சூட்கேசும் எரிந்து போனது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 14:28:11
Privacy-Data & cookie usage: