பெரம்பலூர் அருகே கார்

பைக் மோதல்: சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

schedule
2022-08-28 | 18:38h
update
2022-08-28 | 18:38h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car-bike collision near Perambalur: One person died on the spot!

பெரம்பலூர் அருகே இன்று மாலை மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Advertisement

பெரம்பலூர் அருகே உள்ள லாடபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமன் மகன் ரொட்டிசேகர் @ சேகர் (58). இவர்,இன்று மாலை சுமார் 4.15 அணி அளவில் லாடபுரத்திலிருந்து ஈச்சம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். பெரம்பலூர்- துறையூர் சாலையில், ஈச்சம்பட்டி பங்களா பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பாண்டிச்சேரிலிருந்து கரூர் நோக்கிச் சென்ற கார் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இவ் விபத்தில் காயமடைந்த கார் ஓட்டுநர் பாண்டிச்சேரி நவசக்தி நகரைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சந்தோஷ் (34) மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.09.2026 - 09:25:26
Privacy-Data & cookie usage: