பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து! மக்கள் நீதி மய்யம் கூட்டத்திற்கு சென்று வந்தவர் பலி, 4 பேர் காயம்!!

schedule
2019-02-25 | 05:49h
update
2019-02-25 | 05:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com
Car collapses near Perambalur One kills !! 4 persons were injured
பெரம்பலூர் அருகே கார் கவிழ்ந்த விபத்திற்குள்ளானதில், மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்த ஒருவர் பலியானர், நான்கு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement

சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஸ்குமார் (வயது 31), கிருஷ்ணன் மகன் ராஜா (42), கண்ணன் மகன் விஜயகுமார் (34), வேளச்சேரியை ஏசுதாஸ் மகன் வின்சன்ட்தேவா (44), முனுசாமி மகன் ரோஸ் (45) ஆகியோர் மக்கள் நீதி மையம் கட்சியை சேர்ந்தவர்கள். இவர்கள் திருநெல்வேலியில் நடைபெற்ற மக்கள் நீதி மையம் கூட்டத்திற்கு சென்றுவிட்டு சென்னையை நோக்கி காரில் சென்னைக்கு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். காரை வின்சென்ட் தேவா ஓட்டி வந்தார். கார் பெரம்பலூர் அருகே மங்களமேடு என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது கார் கட்டுபாட்டை இழந்து தலைகீழாக உருண்டோடி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் ரோஸ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் விபத்து மீட்பு குழுவினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்சில் முதலுதவி அளித்தனர்.
மற்ற நான்கு பேர்களும் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ரோஸ் என்பவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டுள்ளது.
Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
09.04.2026 - 10:23:55
Privacy-Data & cookie usage: