பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற பக்தர் மீது கார் மோதி பலி!

schedule
2020-01-23 | 16:29h
update
2020-01-23 | 16:31h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car collides with pilgrims trying to cross National Highway near Perambalur

பெரம்பலூர் தீரன் பகுதியில் சாலை கடக்க முயன்ற பக்தர் மீது கார் மோதி விபத்திற்குள்ளானதில், சம்பவ இடத்திலேயே பலியானார்.

Advertisement

பெரம்பலூர் அருகே தீரன் பகுதியில் சாய்பாபா கோயில் உள்ளது. கோயிலுக்கு வந்த பக்தர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது திருச்சியில் சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த பெருமாள் (வயது 85) என்பது தெரிய வந்தது. ஒவ்வொரு வராமும் கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், சடலத்தை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருமாளின் பேரன் வடிவேல் (வயது 37) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர் நித்யா விசாரணை நடத்தி வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.07.2026 - 22:28:53
Privacy-Data & cookie usage: