பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து : தெலுங்கானவை சேர்ந்தவர் பலி

schedule
2017-05-04 | 07:04h
update
2026-06-27 | 12:58h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

car collision near perambalur: Telangana belonged to the victim || பெரம்பலூர் அருகே கார் மோதி விபத்து : தெலுங்கானவை சேர்ந்தவர் பலி

பெரம்பலூர் அருகே இன்று அதிகாலை கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு கம்பி மீது மோதியதில் தெலுங்கானவைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியானர்.

Advertisement

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே உள்ள உப்பரப்பள்ளியை சேர்ந்தவர் செல்வம் (வயது 69). அவர் நேற்றிரவு மதுரையில் இருந்து சென்னை வழியாக தெலுங்கானவிற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

காரை அவரே ஓட்டி வந்த நிலையில், அதிகாலை சுமார் 12.15 மணியளவில், பெரம்பலூர் மாவட்டம், மங்களலமேடு அருகே உள்ள சின்னாறு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கார் எதிர் பாராத விதமாக சாலையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பி மீது மோதியது.

இதில், காரில் இடபுறமாக பயணித்த செல்வத்தின் மனைவி சுலோக்சனா (வயது 60) சம்பவ இடத்திலேயே பரிதாபபமாக உயிரிழந்தார். காரில் உடன் பயணித்த சாமிநாதன், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த மங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விபத்தில் சிக்கியவர்களை மீட்டு முதலுதவி செய்தனர். இறந்து போன சுலோக்சனாவின் உடலை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து மங்கலமேடு போலீசார் வழக்குப்திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 12:59:01
Privacy-Data & cookie usage: