பெரம்பலூர் அருகே மைல் கல்லில் கார் மோதி விபத்து: ஐயப்ப பக்தர்கள் இருவர் பலி; 4 பேர் படுகாயம் !

schedule
2021-11-22 | 07:22h
update
2021-11-22 | 07:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car crash at milestone near Perambalur: Two Ayyappa devotees killed; 4 injured!

பெரம்பலூர் மாவட்டத்தில் செல்லும், திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அயன்பேரையூர் பிரிவு சாலை என்ற இடத்தில், சொந்த ஊர் நோக்கி ஐயப்ப பக்தர்கள் சென்ற செவர்லெட் கார் சாலையோர மைல் கல்லில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் செங்கல்பட்டு மாவட்டம் கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாபு மகன் ஆனந்த் (27), ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சூர்யா(40), ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement

மேலும் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூரை சேர்ந்த கணேசன்(42), கொளப்பாக்கத்தை லட்சுமணன்(30) மற்றும் மதுராந்தகத்தை சேர்ந்த செல்வமணி(28), ஆகிய நான்கு பேரும், படுகாயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், முதற்கட்ட விசாரணையில், சனிக்கிழமை சென்னையில் புறப்பட்ட இவர்கள் ஐயப்பன் கோவிலுக்கு சென்று விட்டு ஞாயிறன்று இரவு முழுவதும் தூங்காமலும், போதிய ஓய்வு எடுக்காமலும் விடிய விடிய காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 16:21:03
Privacy-Data & cookie usage: