சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரி கார் மோதி பலி!

schedule
2017-03-23 | 19:32h
update
2026-06-06 | 14:50h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car crash kills florist who tried to cross the road!

பெரம்பலூர் அருகே சாலை கடக்க முயன்ற பூ வியாபாரி கார் மோதி பலியானர்

பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே உள்ள மேட்டுத் தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45), இன்று மாலை பெரம்பலூர் தீரன் அருகே உள்ள சாய்பாபா கோவிலில் பூ வியாபாரம் செய்து வந்தார்.

Advertisement

அருகே இருக்கும் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் முருகேசன் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டதில் முருகேசன் ரத்த காயங்களுடன் துடித்து அலறினார். அங்கிருந்தவர்கள் முருகேசனை மீட்டு விபத்திற்கு உள்ளான காரிலேயே உடனடியாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கொண்டு வந்தனர்.

மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கார் ஓட்டுனர் சண்முகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
06.06.2026 - 14:50:46
Privacy-Data & cookie usage: