பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது கார் மோதி விபத்து: பெண் உயிரிழப்பு- 2 பேர் காயம்!

schedule
2022-09-09 | 16:09h
update
2022-09-09 | 16:09h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car crashes into people trying to cross the road on a motorcycle near Perambalur: Woman killed, 2 injured!

பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே மோட்டார் சைக்கிளில், திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையை இன்று மதியம் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருவர் காயம் அடைந்தனர்.

Advertisement

கூத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பருவழுதி (60). இவரது மனைவி செல்வி (52) இவரது மகள் சூர்யா (25). இவர்கள் மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் திருவிளக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு சென்று விட்டு மீண்டும் கூத்தனூர் செல்வதற்காக, திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை பாடாலூர் அருகே கடக்க முயன்றனர்.

அப்போது சென்னையிலிருந்து திருச்சியை நோக்கி சென்ற கார் பைக் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில், செல்வி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த செல்வியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்ப பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.05.2026 - 01:04:40
Privacy-Data & cookie usage: