பெரம்பலூர் அருகே கார்

லாரி மீது மோதி விபத்து; 4 பேர் பலி 5 பேர் காயம்!

schedule
2022-04-03 | 14:44h
update
2022-04-04 | 10:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car-truck collision near Perambalur; 4 killed, 5 injured!

திருச்சி – சமயபுரம் கோவிலுக்கு சென்று விட்டு கள்ளக்குறிச்சிக்கு திரும்பி செல்ல பெரம்பலூரை நோக்கி அதிவேகமாக இனோவா கார் ஒன்று, திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. கார் பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருகே உள்ள மலையப்ப நகர் பிரிவு பாதை அருகே இன்று மதியம் 3 மணியளவில், வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி, எதிர் திசையில் பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியில் இருந்து, திருச்சி மாவட்டம் கொணலையில் உள்ள கிடங்கிற்கு நெல் மூட்டைகள் ஏற்றி சென்ற லாரியின் முன் பகுதியில் பலத்த வேகத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

Advertisement

இதில், காரில் பயணம் செய்த ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலும், மற்றொருவர் மருத்துவமனையிலும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு, விபத்து மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்தில் சிக்கியர்வர்களை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். வாகனங்களை அப்புறப்படுத்திய போலீசார் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், காரில் 9 பேர்கள் பயணம் செய்துள்ளனர். அதில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள முடியனூரை சேர்ந்த முனியன் மகன் கண்ணன் (45), கள்ளக்குறிச்சியை சேர்ந்த மணி மகன் கார்முகில் (45) கதிரவன் மகன் லிங்கேந்திரன் (45), மணி மனைவி தமிழரசி (65), ஆகிய 4 பேரும் இறந்து விட்டனர்.

மேலும் காரில் பயணம் செய்த முடியனூரை சேர்ந்த சந்துரு மனைவி வேதவள்ளி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கதிரவன் மகன்கள் சந்திரவதனன், கிஷோர் ஆகியோர் திருச்சி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்னர். இது வழக்குப் பதிவு செய்த போலீசார் கார் டிரைவர் ஆரோக்கிய நெல்சனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி மணி விபத்து நிகழ்ந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார், சாலையின் நடுவே உள்ள சென்டர் மீடியன் பிரிவை மூடும்படி உத்தரவிட்டதோடு, பெரம்பலூர் மாவட்ட எல்லையில் தேசிய நெடுஞ்சாலையில், விபத்து பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடத்தில் உள்ள அனைத்து சென்டர் மீடியன் பிரிவுகளையும் மூடும்படி அறிவுறுத்தினார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
08.06.2026 - 20:46:34
Privacy-Data & cookie usage: