கேரம் போட்டிகள் நாளை பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

schedule
2017-09-06 | 07:17h
update
2026-06-16 | 05:08h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Caram competitions are held in Perambalur district sports ground tomorrow.

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் விடுத்துள்ள தகவல் :

கேரம் விளையாட்டுப் போட்டிகள் 07.09.2017 அன்று காலை 8.30 மணியளவில் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. இளநிலைப்பிரிவில் மழலை வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலும், முதுநிலைப் பிரிவில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலும் நடைபெற உள்ளது.

Advertisement

இளநிலைப் பிரிவு மழலை வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான ஒற்றையர் போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.1,000-மும், 2ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.500–ம், 3ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250–ம் பரிசு வழங்கப்படும்.

முதுநிலைப் பிரிவு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான இரட்டையர் போட்டியில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.4,000-மும், 2ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2,000-மும், 3ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.1,000-மும் என பரிசுத் தொகை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும்.

வெற்றி பெறுபவர்கள், அக்டோபர் 2017 மாதம் நடத்தப்பட உள்ள மாநில அளவிலான கேரம் விளையாட்டிகளில் பங்கேற்க அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுத்தொகை மாணவ, மாணவியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மாணவ, மாணவியர்கள் பிறந்த தேதிக்கான கல்விச் சான்றிதழை தலைமை ஆசிரியரிடமிருந்து பெற்று வரவேண்டும். மேலும், வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகியவற்றை கொண்டு வரவேண்டும், என மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 05:08:42
Privacy-Data & cookie usage: