பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு : கணினி இயக்குபவர் பணி

schedule
2018-06-04 | 17:07h
update
2026-07-05 | 14:19h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Career in Child Safety Unit of Perambalur District: Computer Operator Job

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் (ஒரு பணியிடம்) பணியிடத்திற்கு ஓராண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் நியமனம் செய்யப்பட உள்ளார்.

Advertisement

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியில் பட்டயப்பயிற்சி பெற்று ஏதாவது ஒரு நிறுவனத்தில் கணினி இயக்குவதில் ஒரு வருடம் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

01.06.2018 அன்று 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு ஒரு மாதத்திற்கு ரூ.10,000- ( பத்தாயிரம் மட்டும்) தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் www.perambalur.tn.nic.in என்ற வலைதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை 19.06.2018 அன்று மாலை 05.00 மணிக்குள் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 164, இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின் ரோடு, பெரம்பலூர் – 621212 என்ற முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 14:19:43
Privacy-Data & cookie usage: