பெரம்பலூர் அருகே காரின் முன்பக்க டயர் வெடித்ததில் விபத்து: பெண் பலி! 5 பேர் காயம்!!

schedule
2022-09-01 | 15:43h
update
2022-09-01 | 16:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Car’s front tire burst accident near Perambalur: Woman killed! 5 injured!!

பெரம்பலூர் அருகே உள்ள ஆலத்தூர்கேட் பகுதியில் காரின் டயர் வெடித்து விபத்திற்குள்ளனாதில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர்.

Advertisement

சென்னை பள்ளிக்கரணை சேர்ந்தவர்கள் கருப்புசாமி மகன் ரகுபதி (55), இவரது மனைவி பானுமதி (45), மகன் சேமன் (25), துரைசாமி (60), இவரது மனைவி சுலக்ஷனா (58), மகள் ஜனனி (24), ஆகிய பேரும் பழனி சென்று விட்டு சென்னை நோக்கி பெலிரோ காரில் சென்றுக் கொண்டிருந்தனர். காரை ரகுபதி ஓட்டி வந்தார். கார் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் கேட் அருகே வந்த போது முன்பக்க டயர் வெடித்தது. நிலைகுலைந்த கார், சாலையின் தடுபபுக் கட்டையில் மோதி விபத்திற்குள்ளானது. இதில் பானுமதி உயிரிழந்தார். மற்ற 5 பேரும், பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த பாடாலூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்:

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.08.2026 - 02:18:51
Privacy-Data & cookie usage: