பெரம்பலூர் அருகே பூட்டியிருந்த பூச்சி மருந்து கடையில் ரொக்கம் ரூ. 60 ஆயிரம் திருட்டு

schedule
2017-12-03 | 14:38h
update
2017-12-03 | 15:25h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cash in pesticide shop near Perambalur Rs. 60 thousand theft

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூரை சேர்ந்த சிம்மு மகன் செல்வராஜ் (வயது 38). இவர் அதே ஊரில், மேலப்புலியூர் செல்லும் பிரிவு சாலையில் பூச்சி மருந்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வந்து கடையை திறக்க முயன்றார். அப்போது பூட்டை இருந்த கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே சென்று இருப்பது தெரிய வந்தது. மேலும், கடையின் உள் சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்து ரொக்கம் ரூ. 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் எடுத்து சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து தடய அறிவியல் நிபுணர்கள் உதவியுடன் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.. இது நாள் வரை பெரம்பலூர் நகருக்குள் கைவரிசை காட்டி கொண்டிருந்த கொள்ளையர்கள் பெரம்பலூர் புறநகர் பகுதிளில் கைவரிசை காட்ட தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
29.06.2026 - 15:25:51
Privacy-Data & cookie usage: