பெரம்பலூர் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த மாடுகள் திருட்டு

schedule
2017-02-01 | 06:16h
update
2026-06-24 | 07:40h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

cattle theft

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள வெண்பாவூர் கிராமத்தை சேர்ந்தவர் பாவாடை (வயது 45), விவசாயி. இவர் தனது வயலில் தனது சொந்தமான வயலில் பட்டி அமைத்து கறவை மாடுகளை வைத்து பால் கறந்து ஊற்றி பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு பட்டியில் மாடு கட்டி அடைத்துவிட்டு வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று காலை பால் கறவை செய்ய பாவடை வந்த போது பட்டியின் பூட்டு உடைக்கப்பட்டு தலா ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள 2 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் கை.களத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கை.களத்தூர் போலீசார் களவு போன கறவை மாடுகளை வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
24.06.2026 - 07:40:55
Privacy-Data & cookie usage: