காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரம்பலூரில் திமுக உள்ளிட்ட கட்சியினர் சாலைமறியல்!

schedule
2018-04-03 | 09:51h
update
2026-07-05 | 06:36h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cauvery Management Board reiterated the plea to set up the roadblock, including the DMK!

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு,க. மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில் ,காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் 500 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்!

Advertisement

காவேரி மேலான்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து , பெரம்பலூர் மாவட்டத்தில், தி.மு.க. மாவட்ட கழக செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் தலைமையில் காங்கிரஸ், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், விவசாயிகள் சங்கங்கள் உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் சார்பில் ஊர்வலமாக வந்து, கோஷங்கள் முழங்க, பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் காமராஜர் வளைவு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதில் மாநில நிர்வாகிகள் பா.துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், வி.எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் என்.ராஜேந்திரன், காங்கிரஸ் கட்சி மதன், ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் செ.துரைராஜ், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சி. தமிழ் மாணிக்கம் , தி.மு.க.நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர்கள் நூருல்ஹிதா இஸ்மாயில், தழுதாழை பாஸ்கர், மாவட்ட பொருளாளர் செ இரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்கள் என். கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன், ஒன்றிய பொறுப்பாளர்கள் வீ. ஜெகதீசன், பாடாலூர்சோமு. மதியழகன், மருவத்தூர் சி .இராஜேந்திரன், பெரம்பலூர் நகர செயலாளர் எம்.பிரபாகரன், உள்ளிட்ட 500 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
05.07.2026 - 06:36:44
Privacy-Data & cookie usage: