பெரம்பலூர் மாவட்ட இளைஞர்களுக்கு இலவச சி.சி.டிவி கேமரா, பொருத்தும் வேலைவாய்ப்பு பயிற்சி!

schedule
2022-05-27 | 13:53h
update
2022-05-27 | 21:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

பெரம்பலூரில் உள்ள ஐஓபி கிராமிய சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் சி.சி.டிவி கேமரா, பொருத்துதல் மற்றும் சேவை (CCTV CAMERA INSTALLATION & SERVICE) இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற மே 30 ஆம் தேதி முதல் இலவசமாக அளிக்கப்படுகிறது.

19 – 45 வயதிற்கு குறைவாக, எழுத படிக்க தெரிந்த, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும், சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சியில் கிராமப்புற இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும்

Advertisement

13 நாட்கள் நடக்கும் இப்பயிற்சியானது, காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடக்கும். பயிற்சியின் போது, காலை, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும். பயிற்சி முடித்து, தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும். வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும்

விருப்பம் உள்ளவர்கள், பெரம்பலூர் சங்குப்பேட்டை ஐஓபி வங்கியின் மாடியில் உள்ள ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில், பெயர், வயது, விலாசம், கல்வித் தகுதி ஆகியவற்றை குறிப்பிட்டு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஆகியவற்றின் நகல், 3பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, வங்கி கணக்கு புத்தகம், வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் (PIP) அல்லது குடும்ப அட்டை அல்லது குடும்பத்தில் எவரேனும் 100 நாள் வேலை அட்டை ஆகியவற்றையும் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVT: விளம்பரம்:

 

English Summary: CCTV CAMERA INSTALLATION and SERVICE Job training Free for youth of Perambalur district!

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.06.2026 - 08:18:58
Privacy-Data & cookie usage: