திருமாவளவனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வி.சிக. பெரம்பலூர் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முடிவு

schedule
2017-08-13 | 13:48h
update
2026-07-03 | 08:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Celebrate the birth anniversary of Thirumavalavan VCK party Decision at the Perambalur district executive meeting

பெரம்பலூர் மாவட்ட வி.சி.க செயற்குழுக் கூட்டம், பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே உள்ள ராஜா ரெஸ்டாரண்ட் கூட்டரங்கில் மாவட்டச் செயலாளர் சி.தமிழ்மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பொருளாளர் அ.கலையரசன், மாவட்ட துணை செயலாளர் ந.கிருஷ்ணகுமார், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மு.உதயகுமார், பெரம்பலூர் சட்ட மன்ற தொகுதி செயலாளர் வழக்கறிஞர் ரத்தினவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

பெரம்பலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர் வரவேற்றார்.

மாநில துணைச் பொதுச் செயலாளர் வன்னிஅரசு, வி.தொ.வி.இ மாநில செயலாளர் வீர.செங்கோலன், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அ.க.தமிழாதன்,

வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் பேரா.முருகையன், இரா.சீனீவாசராவ், தொண்டரணி பாதுகாப்பு மாநில துணைச் செயலாளர் கராத்தே.பெரியசாமி,

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி து.செயலாளர் சா.மன்னர்மன்னன், மு.மா.கழகம் மாநில துணைச் செயலாளர் அ.க.தமிழ்க்குமரன்,

பெரம்பலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் எம்.பி மனோகரன் மற்றும் மாவட்ட ஊடக மைய அமைப்பாளர் இனியன் (எ) மதுபாலன் , எசனை சீமா.ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், வரும் ஆக.17 அன்று தொல்.திருமாவளனின் பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து கிளைகளிலும் கொடியேற்றி, இனிப்பு வழங்கி கொண்டாடுவது,

பள்ளி மாணக்கர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குவது, ரத்ததான முகாம் நடத்துவது, அன்னதானம், இலவச வேட்டி சேலை போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்றும்,

செப்.17 அன்று நடக்கும் மாநில சுயாட்சி மாநாட்டிற்கு ஏராளமான வாகனங்களில் செல்வது என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பெரம்பலூர் நகர செயலாளர் தங்க.சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 08:22:33
Privacy-Data & cookie usage: