நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த தைத்திங்கள் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மிக சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாட வேண்டும் செ.காந்திசெல்வன் வேண்டுகோள்

schedule
2019-01-13 | 15:34h
update
2019-01-13 | 15:34h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Celebrate the Thai. 1st., Tamil New Year Noticed Dmk Former Leader MK Karunanithi by S.Gandhiselvan

நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயற்குழு கூட்டம் மாவட்ட தி.மு.க அலுவலகம், அன்னை அஞ்சுகம் முத்துவேலர் இல்லம், தளபதி அரங்கில் நடைபெற்றது. மாவட்டஅவைத்தலைவர் இரா.உடையவர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டபொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான செ.காந்திசெல்வன் கலந்து கொண்டு கூட்டபொருள் பற்றி விளக்கமாக பேசினார். அப்போது, அவர் பேசுகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த தைத்திங்கள் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மிக சிறப்பாக எழுச்சியுடன் கொண்டாடுவதுடன், தைப் பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி ஒன்றிய, நகர, பேரூர்களில் அனைத்து பகுதிகளிலும் சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Advertisement

இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.இராமசுவாமி, சரஸ்வதி, மாநில நிர்வாகிகள் ப.இராணி, இரா.நக்கீரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் பி.இராமலிங்கம், விமலாசிவக்குமார், பொருளாளர் கே.செல்வம், தலைமை செயற்குழு ம.இளஞ்செழியன், பவித்திரம் கண்ணன், பொதுக்குழு இரா.மாயவன், க.அழகரசு,
ஒன்றியக் கழக செயலாளர்கள் கே.பி.ஜெகநாதன், ஆர்.எம்.துரைசாமி, அ.அசோக்குமார், எம்.பி.கௌதம், வி.கே.பழனிவேல், துரை இராமசாமி, பி.பாலசுப்ரமணியம், பெ.நவலடி, நகரக் கழக செயலாளர்கள் என்.ஆர்.சங்கர்,ராணாஆர்.ஆனந்த், பேரூர் கழக செயலாளர்கள் பி.நடேசன், பி.ஜெயக்குமார், என்.செல்வராஜ், டி.பி.எஸ்.கார்த்திகேயன், சி.செல்லவேல், எம்.சுந்தர்ராஜன், கே.கண்ணன், பேச்சாளர் இராசகோபால், சார்பு அணி நிர்வாகிகள் எஸ்.இளமதி, சாம்சம்பத், நடராஜன், கே.சுகுமார், சி.விஸ்வநாத்,பூபதி, கதிர்வேல், நந்தகுமார், ஆனந்தகுமார், எம்.கே.காந்தி, எஸ்.ஆனந்த், பிரபாகரன், ஆர்.பாபு, பிரகாசம், நவீன், திருமுருகன், அய்யாவு, இராசகோபால், கௌதம், சரவணன், திவாகர், ரமேஷ் அண்ணாதுரை,பாக்கியம், நிர்மலா, லட்சுமி, விஜயபாஸ்கர், மார்டின்கிறிடோபர், சரவணன், பார்த்தீபன், தமிழரசு, கணபதி, பழனிசாமி, பொன்.சந்திரசேகர், என்.எஸ்.சுகுமார், செல்வராஜ், பழ.சங்கர், கருணாநிதி, சரவணன், உதயசூரியன், சந்திரசேகரன், சக்ரவர்த்தி, நேரு, சுப்ரமணி, திராவிடமணி, தர்மராஜன், சத்தியபாபு, முருகேசன், க.சுப்ரமணியம், ஜஹாகீட் உசேன், இம்ரான், கென்னடி, சௌகரபாஷா, மனோகரன், கனகராஜ், வெங்கடாஜலம், பழனிசாமி, கதிரவன், நந்தகுமார், சீனிவாசன், சுந்தரவடிவேல், சென்னிமலை, அருள், நாகேந்திரன், குணாலன், ரவிச்சந்திரன், கார்த்தி, மோகன்ராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அறிவித்த தைத்திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக மிகசிறப்பாக எழுச்சியுடன் கொண்டாடுவது, தைப் பொங்கல் மற்றும் தமிழர் திருநாளையொட்டி ஒன்றிய, நகர, பேரூர்களில் அனைத்து பகுதிகளிலும் சிறுவர், சிறுமிகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்குவது, தலைவர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதைவெல்வோம் என்றதாரக மந்திரத்தை செயலாற்றும் வகையில், அனைத்து ஒன்றியங்களிலும் உள்ள ஊராட்சி பகுதிகளில் ஊராட்சி சபைக் கூட்டம் சிறப்பாக நடத்தி மத்திய, மாநில அரசுகளின் அவலஆட்சியை எடுத்துரைத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 04:56:52
Privacy-Data & cookie usage: