பெரம்பலூரில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினவிழா

schedule
2017-12-15 | 19:23h
update
2026-07-04 | 12:13h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

celebrated in perambalur, all countries and people with different abilities day

பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தின விழா ஸ்ரீகவுதம புத்தர் செவி மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்புப் பள்ளி வளாக மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் இன்று நடைபெற்றது.

Advertisement

அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுப் பொருட்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் பாலகிருஷ்ணன், முடம் நீக்கியல் வல்லுநர் ஜெயராமன், செவித்திறன் மற்றும் பேச்சுப் பயிற்சி நிபுனர் செந்தில்முருகன், கவுதம புத்தர் பள்ளி தாளாளர் லில்லி கோபிநாத் மற்றும் அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன தாளாளர்கள், மாற்றுத் திறனாளிகள் சங்க பிரதிநிதிகள், அரிமா சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 12:13:46
Privacy-Data & cookie usage: