சாலையின் குறுக்கே பைக்கில் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியவர்கள் கைது!

schedule
2021-08-01 | 05:30h
update
2021-08-01 | 07:30h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Celebrators were arrested for cutting a birthday cake and cutting a two-wheeler by obstructing traffic across the road Near in Perambalur

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, சாலையின் குறுக்கே போக்குவரத்திற்கு இடையூறாக, மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதன்மீது பிறந்தநாள் கேக் வைத்து பட்டா கத்தியினாள் கேக் வெட்டியும், மது அருந்திக் கொண்டும் இளைஞர்கள் கொண்டாடினார்கள். மேலும் இதனால் அந்த வழியாக சாலையில் பயணம் செய்த பயணிகள் பயணம் செய்யவே மிகவும் இடையூறாக இருந்துள்ளது. இதுகுறிந்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் சென்ற காவலர்கள், சம்பட இடத்திற்கு சென்று அங்கு சாலையில் பிறந்த நாள் கொண்டாடிய வேப்பந்தட்டையை சேர்ந்த சேட்டு மகன் ஹரிகிருஷ்ணன் (24), மணிவேல் மகன் ஜனார்த்தனன் (20), தொண்டபாடியை சேர்ந்த நல்லபெருமாள் மகன் சூர்யா @ செல்வகுமார் (30), ஆகியோர்களை மாவட்ட போலீஸ் ச.மணி உத்தரவின் பேரில் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
12.06.2026 - 13:14:12
Privacy-Data & cookie usage: