மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2022-10-01 | 17:41h
update
2022-10-01 | 17:54h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Central Government Staff Selection Commission Free Training Courses Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை) இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள தொகுதி-1 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் 17.08.2022 முதல் நடைபெற்று வருகிறது.

Advertisement

தற்போது, மத்திய அரசின் Staff Selection Commission வெளியிட்டுள்ள Combined Graduate Level பணியிடத்திற்கு 20,000 காலியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இறுதி தேதி 08.10.2022 ஆகும். இத்தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை 06.10.2022 அன்று காலை 11.00 மணிக்குள் நேரில் தொடர்பு கொண்டு இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
18.06.2026 - 00:28:31
Privacy-Data & cookie usage: