சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர், ஆணையக்குழு உறுப்பினர்கள் பெரம்பலூருக்கு வருகை

schedule
2017-07-27 | 14:22h
update
2026-05-02 | 07:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Chairman of the Minorities Commission, Commission members visit Perambalur

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பேராயர் டாக்டர்.எம்.பிரகாஷ் மற்றும் ஆணையக்குழு உறுப்பினர்கள் வருகின்ற ஆக. 3 அன்று பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளனர்.

Advertisement

சிறுபான்மையினர் சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையினத்து மக்கள் பிரதிநிதிகளையும் ஆக. 3. அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்து சிறுபான்மையினருக்கென தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசிக்கவும் கருத்துக்கைள கேட்டறியவும் உள்ளனர்.

சிறுபான்மையினருக்கான கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பொதுமக்களின் பிரதிநிதிகள் யாவரும் மாநில சிறுபான்மையினர் ஆணையக் குழுவினரை சந்தித்து தங்களது குறைகளையும், அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், சிறுபான்மையினர் நல மேம்பாட்டிற்கான தக்க கருத்துக்களையும் தெரிவிக்கலாம்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
02.05.2026 - 07:22:32
Privacy-Data & cookie usage: