இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டு தேதி மாற்றம்; பெரம்பலூர் கலெக்டர் தகவல்!

schedule
2024-01-04 | 14:30h
update
2026-07-10 | 03:22h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Change in date of publication of final voter list; Perambalur Collector Information!

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2024-ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு புகைப்பட வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம்-2024 க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்கண்ட நடவடிக்கைகளுக்கான கால அட்டவணையில் இந்திய தேர்தல் ஆணையம் கீழ்கண்ட மாற்றங்களை செய்துள்ளது.

Advertisement

அதனடிப்படையில் 26.12.2023 (செவ்வாய் கிழமை) அன்று நடைபெற இருந்த ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு 12.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்றும், 01.01.2024 (திங்கள் கிழமை) அன்று நடைபெற இருந்த சுகாதார அளவுருக்களை சரிபார்த்தல், மற்றும் இறுதி வெளியீட்டிற்கு ஆணையத்தின் அனுமதி பெறுதல், தரவுகளை புதுப்பித்தல் மற்றும் அச்சிடுதல் 17.01.2024 (புதன் கிழமை) அன்றும், 05.01.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற இருந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 22.01.2024 (திங்கள் கிழமை) அன்றும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் 12.01.2024 வரை வாக்காளர் பட்டியலின் ஆரோக்கியத்தினை உயர்த்திடும் காரணிகளான இரட்டைப் பதிவுகள் நீக்கம், இறந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்தல் ஆகிய பணிகள் நடைபெறும் எனவும் பொது மக்கள் இப்பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறும் பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.07.2026 - 03:22:50
Privacy-Data & cookie usage: