ஹிந்தியில் சட்டப் பெயர்கள்: எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு!

schedule
2024-03-01 | 08:10h
update
2024-03-01 | 08:10h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Change of names of laws in Hindi: Lawyers boycott court in Perambalur in protest!

பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாக குழுவின் அவசர கூட்டம் சங்கத் தலைவர் இ. வள்ளுவன் நம்பி தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் பி.சிவராமன், செயலாளர் வி.சேகர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். அதில், ஐபிசி சார்.பி.சி. ஐ.ஈ சட்டப் பெயர்களை இந்தியில் மாற்றியும் பெரும்பாலன சட்டப் பிரிவுகளை திருத்தம் செய்து அதில் ஏராளமான இந்தி மொழி வார்த்தைகளை பயன்படுத்தி வழக்கறிஞர்களுக்கோ, பொதுமக்களுக்கோ உரிய கால அவகாசம் தராமல் 01-07-2024ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு அமல்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, இன்றும், நாளை மட்டும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்ற பணிகளில் இருந்து விலகியிருப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. அதன் பேரில் இன்று, பெரம்பலூர் வேப்பந்தட்டை குன்னம் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணிகள் புறக்கணித்து எதிர்ப்பை தெரிவித்தனர்.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.09.2026 - 16:50:06
Privacy-Data & cookie usage: