சென்னை மெட்ரோ ரெயில் புதிய தடங்களில் விரைவில் சேவை

schedule
2018-05-14 | 10:25h
update
2018-05-14 | 17:05h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Chennai Metro Rail service soon on new tracks

சென்னை மெட்ரோ ரயில் புதிய வழித்தடங்கள் பாதுகாப்பு சோதனை நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்கும் என்று மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு முதல் செனாய் நகர் வரையிலான சேவை இரண்டு வழிதடங்களிலும் செனாய் நகர் முதல் நேரு பூங்கா வரையிலான சேவை ஒரு வழிதடத்திலும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில் செனாய் நகர் முதல் நேரு பூங்கா வரையான 2-வது புதிய வழித்தடத்தையும் நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வரையிலான புதிய சுரங்க பாதை சோதனையோட்டத்தையும் மெட்ரோ ரயில் முதன்மை பாதுகாப்பு ஆணையர் மனோகரன் ஆய்வு செய்தார். 4 நாட்கள் நடைபெறவுள்ள ஆய்வில் அவர் சின்னமலை முதல் டி.எம்.எஸ் வரையிலான வழிதடத்தை ஆய்வு செய்யவுள்ளார். ஆய்வுகள் நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Advertisement

 

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.04.2026 - 14:15:59
Privacy-Data & cookie usage: