#Chicken Breeding Farmers Association petition demanding chicks
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைத்தீர் கூட்டத்தில் கறிக்கோழி வளர்ப்பு சங்கத்தினர் கொடுத்துள்ள கோரிக்கை மனுவின் கோரிக்கை விவரம்:
தமிழக அரசு சிறப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெற்று கறிக் கோழி வளர்ப்பு தொழிலை செய்து அவர்களுக்கு ஒரு சிலருக்கு ஆண்டுக்கு மேலும், ஒரு சிலருக்கு கடந்த பல மாதங்களாக கோழி குஞ்சுகள் வழங்கப்படவில்லை. இது குறித்து மனுக்கள் அதிகாரிகளிடம் கொடுத்தும் முறையான நடவடிக்கை எடுக்க ணேவ்டும் என்றும், வங்கியின் நெருக்கடியால் இறந்த விவாசயி பூலாம்பாடி செல்வராஜ் என்பவருக்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்றும், கறிக் கோழி வளர்ப்பு செய்து வரும் தங்களை அரசு காப்பாற்ற முன்வர வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.