குழந்தைகள் காப்பகங்களுக்கும் பணியாளர், உதவியாளர் காலிப் பணியிடங்கள்

schedule
2016-08-23 | 20:36h
update
2026-06-28 | 03:18h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Employee Childcare, assistant vacancies in perambalur Dt
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் விடுத்துள்ள தகவல்.

Childl care

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டார குழந்தை வளர்ச்சி திட்டத்தில் உள்ள 4 குழந்தைகள் காப்பகங்களில் காலியாக உள்ள குழந்தைகள் காப்பக மைய பணியாளர் மற்றும் உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணியிடங்களில் 4 பணியாளர் மற்றும் 4 உதவியாளர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்ய 24.08.2016 முதல் 31.08.2016 மாலை 5.00 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்கள் அனைத்திற்கும் விண்ணப்பிப்பதற்கு பெண்கள் மட்டுமே தகுதியுடையவர்கள்.

குழந்தைகள் காப்பக பணியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பொதுப் பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 25 வயது பூர்த்தியடைந்தும், 35 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Advertisement

பழங்குடியினர் 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். மேலும் நியமன பணியிடத்திற்கும், விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். குழந்தைகள் காப்பக கணக்குகளை தனியே பராமரிக்கும் தகுதி பெற்றிருக்க வேண்டும். தேர;வு செய்யப்படும் குழந்தைகள் காப்பக பணியாளருக்கு பிரதிமாதம் ரூ.3,000- மட்டும் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

குழந்தைகள் காப்பக உதவியாளர் பதவிக்கு எழுதப்படிக்க தெரிந்திருத்தல் வேண்டும் (பள்ளி சான்று), பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கு 20 வயது பூர்த்தியடைந்தும், 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு 20 வயது பூர்த்தியடைந்தும் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பழங்குடியினர் 20 வயது பூர்த்தியடைந்தும் 45 வயதுதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் குழந்தைகள் காப்பக உதவியாளருக்கு பிரதி மாதம் ரூ.1,500 மட்டும் தொகுப்பு+தியமாக வழங்கப்படும்.

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், வருமானச் சான்று, விதவை மற்றும்; கணவரால் கைவிடப்பட்டவர்களாக இருப்பின் அதற்கான சான்றிதழ், உடல் ஊனமுற்றோராய் இருப்பின் அதற்கான சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் ஆகியவற்றின் சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலகத்திலோ அல்லது தங்கள் பகுதிக்குட்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலோ 24.08.2016 முதல் 31.08.2016 மாலை 5.00 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

31.08.2016 அன்று அலுவலக நேரத்திற்குப் பிறகு கால தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் தகவல்களுக்கு 4 வட்டாரங்களிலும் செயல்படும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தையோ அல்லது ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை 04328 – 225803 என்ற எண்ணிலோ தொடர;பு கொள்ளலாம். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 03:18:36
Privacy-Data & cookie usage: