குன்னத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

schedule
2019-03-24 | 03:45h
update
2019-03-24 | 03:45h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Chidambaram parliamentary constituency Candidate introductory meeting

பெரம்பலூர்.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கான சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில் உள்ள எம்.எஸ்.டி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

Advertisement

இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி ஒதுக்கப்பபட்டுள்ளது. இதில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன், பானை சின்னத்தில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

இந்தக் கூட்டத்தில், திமுக காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

துண்டு அணிவித்து கூட்டணி கட்சியினரை கவுரப்படுத்திய வேட்பாளர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் தொகுதியில் மீண்டும், பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும், மோடி ஆட்சிக்கு முடிவு கட்ட அயராது பாடபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
07.07.2026 - 20:06:55
Privacy-Data & cookie usage: