1 lakh free electricity connection: Separate agriculture budget: Farmers Claps and thank the Chief Minister.

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில், அவரது அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழையளவு 861 மி.மீ, ஆகும். 2021 செப்டம்பர் மாதம் வரை பெய்ய வேண்டிய மழையளவு 395 செ.மீ, பெய்த மழையளவு 577.45 செ.மீ, ஆ கும். பயிர் சாகுபடி பரப்பை பொறுத்தவரை தற்சமயம் 59995 எக்டர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

தோட்டக்கலை துறையின் மூலமாக பரப்பு அதிகரித்தல் திட்டத்தில் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம். மரவள்ளி, மஞ்சள் மற்றும் இதர காய்கறி பயிர்கள் 2021-ம் ஆண்டிற்கு 35741 எக்டர் பரப்பு இலக்காக பெறப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் – தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் நீர் ஆதாரத்தை உருவாக்குதல். குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு, சிப்பம் கட்டும் அறை, இயந்திரமயமாக்குதல் போன்ற பணிகளும், தமிழ்நாடு நீர்பாசன வேளாண் நவீன மயமாக்கல் திட்டத்தில், பராம்பரியத்திலிருந்து தோட்டக்கலை பயிர்களுக்கு பல்வகைப்படுத்தும் இனத்தில் கத்தரி. மிளகாய் சொட்டுநீர் பாசனம் ஆகிய இனங்களில் பொருள் இலக்காக 19 எக்டர் மற்றும் நிதி இலக்காக 12.00 இலட்சமும் பெறப்பட்டு பொருள் இலக்கில் 2.33 எக்டர் பணியாணை வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் பொறியியல் துறை மூலமாக உழுவை வாடகை திட்டம், தமிழ்நாடு நீடித்த நிலையான மானாவாரி வேளாண்மைக்கான இயக்கம், மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் மையம் அமைத்தல். உயிரி கட்டுப்பாடு ஆய்வகம் அமைத்தல். விதை சேமிப்பு கிடங்கு அமைத்தல். ௲ரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் அமைத்தல். வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் – தனி நபர் விவசாயிகளுக்கு மானியம். வட்டார அளவிலான வாடிக்கையாளர் இயந்திர சேமை மையம் அமைத்தல்.

கிராம அளவிலான வாடிக்கையாளர் இயந்திர சேவை மையம் அமைத்தல். அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பணிகளும் நடைபெற்று வருகிறது. பொதுப்பணித் துறையின் மூலமாக வரத்து வாய்க்கால்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் தேவையான அளவு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. துறை வாரியான கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

விவசாயிகள் அனைவரும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த ஒரு இலட்சம் இலவச விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கும், வேளாண்மை துறைக்கு தனி பட்ஜெட் வழங்கியதற்கும் மகிழ்ச்சியுடன் எழுந்து நின்று கைதட்டி நன்றி தெரிவித்தனர். பால் கொள்முதல் செய்யும் விவசாயிகளுக்கு 15 நாட்களுக்குள் பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்க வேண்டுமெனவும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் நடைபெறும் மோசடிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு டி.ஆர்.ஓ, அங்கையற்கண்ணி. திட்ட இயக்குநர் லலிதா, வேளாண்மை இணை இயக்குநர் ச. கருணாநிதி, மாவட்ட அளவிலான அலுவலர்கள் மற்றும் ராஜசிதம்பரம் உள்ளிட்ட பல விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Latest News Live Updates - Kalaimalar.

error: Content is protected !!