பெரம்பலூர் -குன்னம்-அரியலூர்-ஜெயங்கொண்டம் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை பிரச்சாரம்; மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் அறிக்கை!

schedule
2026-04-15 | 16:54h
update
2026-04-15 | 16:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Chief Minister M.K. Stalin to campaign tomorrow in support of candidates for the Perambalur, Kunnam, Ariyalur, and Jayankondam constituencies; District DMK In-charge V. Jagadeesan issues a statement.

திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரம்பலூர் – குன்னம்- அரியலூர்- ஜெயங்கொண்டம் ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரச்சாரம் செய்கிறார்.

பெரம்பலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் ஜெயலெட்சுமி, குன்னம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்,
அரியலூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் லதா பாலு, ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் கா.சொ.க.கண்ணன் ஆகியோர்களை ஆதரித்து நாளை மாலை 6.00 மணிக்கு, பெரம்பலூர் – அரியலூர் சாலையில் உள்ள ஒதியம் பிரிவு சாலையில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். இந்த நிகழ்ச்சியில் திமுக துணை பொது செயலாளர் ஆ. ராசா எம்.பி, அமைச்சர் சிவசங்கர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement

நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், மாநில நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் கழகச் செயலாளர்கள், மாவட்ட அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், கிளைக் கழக செயலாளகள், கழகத் தோழர்கள் உள்ளிட்ட அனைவரும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
15.04.2026 - 17:08:50
Privacy-Data & cookie usage: