முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா! இனிப்புகளுடன், நலத்திட்ட உதவிகள் வழங்க பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வேண்டுகோள்!

schedule
2024-02-29 | 16:42h
update
2024-02-29 | 17:02h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Chief Minister M. K. Stalin’s birthday party! Perambalur district in-charge V. Jagatheesan request to provide sweets and welfare assistance!

Advertisement

 

திமுக பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் மார்ச் 01, அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா பெரம்பலூர் மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும். அனைத்து கிளைகளிலும் தி.மு‌.க. கொடியேற்றி, இனிப்புகள் வழங்க வேண்டும். பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். மேலும் கலைஞரின் மகளிர் உரிமைத் தொகையான மாதம்தோறும் ரூ.1000, உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை, 

மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தி.மு.க.ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளையும் பொதுமக்களுக்கு கட்சி நிர்வாகிகள் எடுத்துக் கூற வேண்டும்.

இந்த நிகழ்ச்சிகளில் அனைத்து கிளைச் செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணியினர், கழக முன்னோடிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை சிறப்பிக்க வேண்டும், என பெரம்பலூர் மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.08.2026 - 00:45:44
Privacy-Data & cookie usage: