“Chief Minister with People” Scheme: Special Camps in Perambalur District Municipality, Town Panchayat’s : Collector Information

பெரம்பலூர் நகராட்சி மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர்,லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் “மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் மூலம் சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட நாட்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.

அதன்படி பெரம்பலூர் நகராட்சியில் உள்ள வார்டு எண்கள் 1, 2, 3, 4, 12 மற்றும் 13 இல் குடியிருக்கும் பொதுமக்கள் 18.12.2023 அன்று வடக்குமாதவி ரோட்டில் அமைந்துள்ள என்.எஸ்.கே மஹாலிலும், வார்டு எண்கள் 7, 8, 9, 10, 11 மற்றும் 21 இல் குடியிருக்கும் பொதுமக்கள் 19.12.2023 அன்று துறைமங்கலம் ஜே.கே மஹாலிலும், வார்டு எண்கள். 5, 6, 18, 19, மற்றும் 20 இல் குடியிருக்கும் பொதுமக்கள் 20.12.2023 அன்று சங்குப்பேட்டை அருகில் உள்ள முத்துக்கோனார் திருமண மண்டபத்திலும் மற்றும் வார்டு எண்கள். 14, 15, 16, மற்றும் 17 இல் குடியிருக்கும் பொதுமக்கள் 21.12.2023 அன்று துறையூர் ரோடு, அருகில் உள்ள முத்துக்கிருஷ்ணா மக்கள் மன்றத்திலும் நடைபெறுகிறது.

மேலும், அரும்பாவூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் 27.12.2023 அன்று அரும்பாவூர், அ.மேட்டூரில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 28.12.2023 அன்று பூலாம்பாடி, சீனிவாச பெருமாள் கோவில் தெருவில் உள்ள ரெட்டியார் திருமண மண்டபத்திலும், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 29.12.2023 அன்று குரும்பலூர், மெயின் ரோடு, ரெட்டியார் திருமண மண்டபத்திலும் (பங்காரு அம்மாள்) மற்றும் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் 30.12.2023 அன்று லெப்பைக்குடிக்காடு, மெயின் ரோடு, கிழக்கு பள்ளிவாசல் மஹாலில் நடைபெறும் இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது.

எனவே, பெரம்பலூர் நகராட்சியில் உள்ள பொதுமக்கள் வார்டுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேதியிலும், மற்றும் பூலாம்பாடி, அரும்பாவூர், லெப்பைக்குடிக்காடு மற்றும் குரும்பலூர் பேரூராட்சிகளில் உள்ள பொதுமக்கள் முகாம் நடைபெறும் தேதி அன்று தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பயன்பெறுமாறு பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!