குழந்தைகள் தின தேசிய அளவிலான போட்டி எருமப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் சாதனை ; சி.இ.ஓ பாராட்டு!

schedule
2018-11-30 | 15:35h
update
2018-11-30 | 15:42h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Children’s Day National School Competition Erumapatti Government school students achievement

குழந்தைகள் தின தேசிய அளவிலான போட்டியில் எருமப்பட்டி அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாளான குழந்தைகள் தின விழா டெல்லியில் தேசிய பாலபவன் கலாச்சார கலை விழாவாக இந்திய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த போட்டிகள் கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற்றது.

Advertisement

இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் நாமக்கல் சவகர் சிறுவர் மன்ற கலைப்பண்பாட்டுத் துறை சார்பாக தமிழகத்தில் இருந்த எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 9 ம் வகுப்பு மாணவன் பிரதீப், 10ம் வகுப்பு மாணவன் கலைவாணன், 11ம் வகுப்பு மாணவர்கள் சந்தோஷ், தமிழ்ச்செல்வம் ஆகிய நான்கு மாணவர்களும் மற்றும் தமிழாசியர் செந்தில் குமார் தலைமையில் பங்கேற்றனர்.

கிரியேட்டிவ் இந்தியா என்ற தலைப்பிலான போட்டியில் பங்கேற்று பாரம்பரிய இசையான பறை அடித்தலில் தேசிய அளவில் சிறப்பிடம் பெற்று பரிசும், சான்றிதழும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நாமக்கல் சவகர் சிறுவர் மன்ற கலைப்பண்பாட்டுத்துறை திட்ட அலுவலர் தில்லைசிவக்குமார், எருமப்பட்டி பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்..

Tags: Namakkal
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
14.06.2026 - 05:21:25
Privacy-Data & cookie usage: