ஆல்மைட்டி வித்யாலயா பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம்!

schedule
2017-12-24 | 04:51h
update
2017-12-24 | 18:53h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Christmas and New Year Celebration at Allmitty Vidyalaya School!

பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள ஆல்மைட்டி வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளியில் கிறிஸ்துமஸ் மற்றும் 2018 புத்தாண்டு விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.

Advertisement

பள்ளி முதல்வர் சிவகாமி முன்னிலை வகித்தார். முன்னதாக பள்ளி ஆசிரியை கயல்விழி அனைவரையும் வரவேற்றார். பள்ளி தாளாளர் ராம்குமார் தலைமை வகித்து இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை சிறப்பு குறித்தும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுவது குறித்தும் விழா துவக்க உரையாற்றினார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக விரிவுரையாளர் வைரமணி கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வாழ்க்கையில் இளம்பருவத்திலிருந்தே நல்ல எண்ணங்களுடன் முயற்சி செய்தால் எந்த செயலிலும் வெற்றியடைய முடியும் என்றும் சிறப்புரையாற்றினார்.

விழாவில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமனிந்த பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முடிவில் பள்ளி துணை முதல்வர் சாரதா நன்றி கூறினார். விழாவில் ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் குழு செய்திருந்தது.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
04.07.2026 - 13:50:43
Privacy-Data & cookie usage: