பெரம்பலூர் அருகே தீராத வயிற்றுவலியால் பள்ளி மாணவன் எலி மருந்தை தின்று தற்கொலை.

schedule
2017-01-28 | 13:35h
update
2026-06-27 | 18:28h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

chronic stomach, at ate student rate killer

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வி.களத்தூரை சேர்ந்த மாலிக்பாட்ஷா மகன் இம்தியாஸ் (வயது13). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 8 வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் இம்தியாசுக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய இம்தியாசுக்கு வயிற்றுவலி அதிகமானதால் வீட்டில் எலியை கொல்வதற்கு வைத்திருந்த மருந்தை (விஷம்) சாப்பிட்டு மயங்கிய நிலையில் கிடந்தான்.

Advertisement

இதனை பார்த்த உறவினர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி நேற்று 28 ந்தேதி பரிதாபமாக இம்தியாஸ் உயிரிழந்தான். இது தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
27.06.2026 - 18:28:49
Privacy-Data & cookie usage: