CITU conference resolves to set up ESI hospital in Perambalur district!
பெரம்பலூர், அக்.11-இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு பெரம்பலூர்-அரியலூர் 8வது மாவட்ட மாநாடு, பெரம்பலூரில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் தலைமை வகித்தார். வரவேற்புக் குழு தலைவர் டாக்டர் சி.கருணாகரன் வரவேற்றார். முன்னதாக, மாவட்ட தலைவர் ரெங்கராஜ் கொடியேற்றி துவக்கி வைத்தார். துணை செயலாளர் கண்ணன் அஞ்சலி தீர்மானமும் அரியலூர் மாவட்ட செயலாளர் பி.துரைசாமி வேலை அறிக்கையும் வாசித்தனர். மாவட்ட பொருளாளர் ஆர்.சிற்றம்பலம் வரவு செலவு அறிக்கை அளித்தார். மாவட்ட செயலாளர்கள் அ.கலையரசி, வி.தொச விவசாயிகள் சங்கம் ஏ.கே.ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்.சிவானந்தம், எஸ்.என்.துரைராஜ், எம்.பன்னீர்செல்வம், கே.மணிமேகலை, இ.ரெங்கராஜ், எஸ்.சந்தானம் ஆகியோர் தீர்மானக்குழு அளித்தனர். மாநில செயலாளர் சி.ஜெயபால் நிறைவுரை ஆற்றினார்.
மின்சாரம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பொதுத் துறைகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமணை அமைத்திட வேண்டும், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தை போல் போனஸ், பிஎப், இஎஸ்ஐ உள்ளிட்ட சட்ட சலுகைகள் வழங்க வேண்டும், டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாள்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும், கைத்தறி, கட்டுமானம், ஆட்டோ, டாக்சி, சுமைப்பணி, வீட்டுவேலை, தையல் சாலைபோக்குவரத்து, சாலையோர வியாபாரம், முடிதிருத்துவோர், சலவை தொழிலாளர்கள், நேரடியாக வாரியத்தில் பதிவு செய்ய அனுமதி வழங்கிட வேண்டும், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த நாளிலிருந்து நிலுவைத் தொகையுடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும், கைத்தறி தொழிலை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆன்லைனில் ஆட்டோ தொழிலாளா;கள் மீது அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும், ஆட்டோ தொழிலாளர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் டீசல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அங்கன் வாடி மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அரசு ஊழியர்களாக பணி நிரந்தரம் செய்திட வேண்டும், பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் உள்ள ஆலைகளில் குறைந்த பட்ச ஊதியம் 28 ஆயிரம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், சிமெண்ட ஆலை தொழிலாளர்களுக்கு சிமெண்ட ஊதிய ஒப்பந்தப்படி ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டது. துணைச் செயலாளர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.