சிஐடியு பெரம்பலூர் அரியலூர் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்

schedule
2017-08-25 | 18:08h
update
2026-07-03 | 11:51h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

CITU Perambalur Ariyalur District Special council Meeting


பெரம்பலூரில், சிஐடியு அகில இந்திய செயற்குழு கூட்டத்தின் முடிவுகள் குறித்து பெரம்பலூர் அரியலூர் மாவட்டக் குழு சிறப்பு பேரவை பெரம்பலூர் துறைமங்கலத்திலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

Advertisement

சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் பி.துரைசாமி, தலைமை வகித்தார். மின் ஊழியர் மத்திய அமைப்பு மாவட்ட செயலாளர் எஸ்.அகஸ்டின் அனைவரையும் வரவேற்றார். அங்கன்வாடி ஊழியர் மாவட்ட செயலாளர் கே.மணிமேகலை முன்னிலை வகித்தார். சிஐடியு மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் செயற்குழு முடிவுகள் குறித்த விளக்கவுரை ஆற்றினார். சிஐடியு மாவட்ட செயலாளர் ஆர்.அழகர்சாமி சிறப்புரை ஆற்றினார்.

மத்தியில் அளும் மோடி அரசின் கொள்கைகளை கண்டித்தும், தொழிலாளா; நல சட்டங்களை திருத்த வேண்டியும் வரும் நவம்பர் மாதம் 9ஆம் தேதி முதல் 10, 11 ஆகிய மூன்று நாட்கள் பாராளுமன்றம் முன்பு தர்ணா போராட்டத்திற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் கிளை சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. முடிவில் எ.கணேசன் நன்றி கூறினார்.

Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 11:52:05
Privacy-Data & cookie usage: