பெரம்பலூர்

அரியலூர் மாவட்ட சிஐடியு, விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

schedule
2017-01-20 | 03:20h
update
2026-06-25 | 01:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

#CITU

பொதுமக்கள் தொழிலாளர்கள் விவசாயிகள், மற்றும் விவசாய தொழிலாளர்களை பாதிக்கும் நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை கை விடக்கோரியும். ரூ 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் படும் அவதிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் மோடி அரசை கண்டித்தும், வறட்சியால் பாதித்துள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 19 வீரத்தியாகிகள் தினத்தையொட்டி பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

மாவட்ட செயலாளர்கள் சிஐடியு ஆர்.அழகர்சாமி, விவசாயிகள் சங்கம் என்.செல்லதுரை, விவாசாய தொழிலாளர் சங்கம் பி.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிஐடியு மாநில செயலாளா; எஸ்.ராஜேந்திரன், மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.திருநாவுக்கரசு ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் சிஐடியு எ.கணேசன், பி.முத்துசாமி, ஆர்.ராஜகுமாரன், எஸ்.அகஸ்டின், சி.சண்முகம் விவசாயிகள் சங்கம் எ.அன்பழகன், சுபா.தங்கராசு, விதொச வி.காமராஜ், கே.ராஜேந்திரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
25.06.2026 - 01:36:02
Privacy-Data & cookie usage: