மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி

schedule
2017-01-30 | 18:12h
update
2026-06-28 | 00:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Civil service employee in the office of the district promised the abolition of untouchability

பெரம்பலூர் மாவட்ட ஆட்சிப் பணியாளர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சிப் பணியாளர் க.நந்தகுமார் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி இன்று அனைத்துத் துறை அலுவலர்களாலும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்; “இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன், குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன்.

Advertisement

தீண்டாமையை அடிப்படையாக கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ, தெரியாமலோ, சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்.

அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.

இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப் பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும், இதனால் உளமாற உறுதியளிக்கிறேன்” என்று மாவட்ட ஆட்சிப் பணியாளர் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க அனைத்து துறை அலுவலர்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாவட்ட ஆட்சிப் பணியாளர் தலைமையில் இரண்டு நிமிடம் மவுனம் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சிப் பணியாளரின் நேர்முக உதவியாளர்(பொ) மாரிமுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மூர்த்தி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள்ளபிரான் உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
28.06.2026 - 00:35:54
Privacy-Data & cookie usage: