பெரம்பலூர் அருகே இரு தரப்பினர் இடையே மோதல்: போலீசார் விசாரணை!

schedule
2022-04-27 | 16:06h
update
2022-04-27 | 16:35h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Clash between two parties near Perambalur: Police investigate!

பெரம்பலூர் அருகே நான்கு ரோட்டிலிருந்து கவுல்பாளையம் கிராமத்திற்கு செல்லும் சாலையில், நயாகரா என்ற பெட்ரோல் பங்க் எதிர்ப்புறம் உள்ள சில்லி சிக்கன் கடையில்,
கவுல்பாளையம் கிராமம், MBC காலனியில் வசிக்கும் சம்பத் என்பவரின் மகன்கள் மாரிமுத்து மற்றும் செல்வம் ஆகியோர் சில்லி சிக்கன் வாங்கி கொண்டு, கடை உரிமையாளரான அருமடல் பிரிவு சாலையில் உள்ள சரக்கு பாலத்தில் வசிக்கும், மாரியப்பன் மற்றும் அவரது மருமகன் ரமேஷிடம் வம்பு இழுக்கும் நோக்கத்தில் முன்னுக்கு பின் முரனாக பேசியதால் இரு தரப்பினரிடையே நேற்று இரவு கடுமையான மோதல் சம்பவம் ஏற்பட்டது.

Advertisement

இந்த மோதல் சம்பவத்தின் போது, மாரிமுத்துவும் அவரது சகோதரர் செல்வமும் படுகாயத்துடன், சம்பவ இடத்தில் உயிருக்கு போராடி வந்த நிலையில் தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் டிஎஸ்பி., சஞ்சீவ்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று, மோதலை தடுத்து நிறுத்தியதோடு படுகாயமடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
16.06.2026 - 14:33:23
Privacy-Data & cookie usage: