பெரம்பலூர் அருகே கல்லூரி மாணவர்கள் மோதல்: மருத்துவ மனையில் அனுமதி!

schedule
2019-11-28 | 05:51h
update
2019-11-28 | 07:06h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

clash near the college students Near in Perambalur : skull broken Hospitalized!

பெரம்பலூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்லூரி ஒன்றின் மாணவர்கள் நேற்றிரவு சுமார் 20 பேர் பலத்த ஆயுதங்களுடன் மோதிக் கொண்டனர். இதில் பல மாணவர்களின் மண்டை உடைந்தது. மேலும், அங்கிருந்தவர்கள் மூலம் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், இது குறித்து காவல் நிலையத்திற்கு மோதிக் கொண்ட மாணவர்கள் தரப்பிலோ, கல்லூரி நிர்வாகத்தின் தரப்பிலோ எந்த வித புகாரும் அளிக்கவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்படும் என்பதால் மாணவர்களின் பெற்றோர்களை சமசரப்படுத்தி விடுகின்றனர். மேலும், கல்லூரி நிர்வாகமே தானே நடவடிக்கை எடுப்பதுடன் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் கொடுத்து வீட்டிற்கு அனுப்பும், அதோடு அவரால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்யும் வகையில் அபாரதமும் விதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
19.04.2026 - 01:40:09
Privacy-Data & cookie usage: