பெரம்பலூரில் தூய்மையே சேவை இயக்க விழிப்புணர்வு ரதம்

schedule
2017-09-17 | 17:20h
update
2026-07-03 | 18:55h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Clean service operating in the pure awareness Ratham in Perambalur


பெரம்பலூர் : இந்திய அரசின் உத்தரவுப்படி செம்டம்பர் மாதம் 15 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் தூய்மையே சேவை என்ற தலைப்பின் கீழ் தூய்மை இந்தியா திட்டத்தின் சார்பில் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் பல்வேறு வகையான தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement

அதன் ஒருபகுதியாக இன்று (17.09.17) “தூய்மையே சேவை” இயக்க விழிப்புணர்வு ரதத்தினை சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் மா.சந்திரகாசி, சட்டமன்ற உறுப்பினர்கள் ரா.தமிழ்செல்வன் (பெரம்பலூர்), ஆர்.டி.ராமசந்திரன் (குன்னம்) ஆகியோர்களது முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து தூய்மையே சேவை திட்டத்தின் சார்பில் சிறுவாச்சூர் ஊராட்சியில் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா ஆகியோர் குப்பைகளை அகற்றி தூய்மையின் அவசியத்தை பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 18:55:43
Privacy-Data & cookie usage: