தூய்மை இந்தியா திட்டம் குறித்து பெரம்பலூர் மாவட்டத்தில் விழிப்புணர்வு போட்டிகள்

schedule
2017-09-05 | 02:31h
update
2026-07-03 | 13:15h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Cleanliness India scheme about to raise awareness competitions in the perambalur district

பெரம்பலூர் : இந்திய அரசாங்கத்தின் சார்பில் குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சகத்தின் மூலம் (Ministry of Drinking Water and Sanitation) இந்திய அளவில் அனைத்து மாநிலங்களிலும் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கமான சுகாதாரம் குறித்த பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப்போட்டி மற்றும் படப்போட்டிகள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் நடத்த திட்டமிடப்பட்டது.

Advertisement

அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் கட்டுரை மற்றும் குறும்படப்போட்டிகள் நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட எசனை, ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதனூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அன்னமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் திட்ட இயக்குநர் ஸ்ரீதர் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

இந்திய அரசாங்கத்தின் சார்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கட்டுரைப் போட்டி “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு என்னால் இயன்றவை என்ன?” என்ற தலைப்பிலும், குறும்படப்போட்டிக்கு 2 நிமிடம் முதல் 3 நிமிடம் வரையுள்ள கால அளவில் “தூய்மையான இந்தியாவை உருவாக்குவதற்கு எனது பங்களிப்பு” என்ற தலைப்பிலும் நடத்தப்பட்டது.

இப்போட்டிகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள், 18-60 வயதுக்குட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சிறப்பு வகைப் பிரிவினர் (மாற்றுத்திறனாளிகள்) பிரிவில் இருபாலரும் (ஆண் / பெண்) கலந்து கொண்டனர்.

நேற்று நடைபெற்ற போட்டிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர்கள் வட்டார அளவில் 06.09.2017 அன்றும், மாவட்ட அளவில் 08.09.2017 அன்றும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இறுதியாக 10.9.2017 அன்று மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும், என தெரிவிக்கப்பட்டது.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
03.07.2026 - 13:15:28
Privacy-Data & cookie usage: