பெரம்பலூர் மாவட்டத்தில் திரையரங்குகள் மூடல்

schedule
2017-07-03 | 15:24h
update
2026-05-01 | 10:26h
person
www.kalaimalar.com
domain
www.kalaimalar.com

Closure of theaters in Perambalur district
ஜிஎஸ்டி மற்றும் கேளிக்கை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் மாவட்டத்தில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி வரியை குறைக்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகள் விதித்துள்ள கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று முதல்தமிழகம் முழுவதிலும் திரையரங்கு உரிமையாளர்கள் திரையரங்குகளை மூடி காலவரையாற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

பெரம்பலூர் மாவட்த்தில் உள்ள ராம், கிருஷ்ணா, சுவாமி, ராஜா ஆகிய 4 திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இது போல் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் திரையரங்குகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Perambalur
Advertisement

Imprint
Responsible for the content:
www.kalaimalar.com
Privacy & Terms of Use:
www.kalaimalar.com
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
01.05.2026 - 10:27:07
Privacy-Data & cookie usage: