#Co-operative Credit Union for more than a year in the past vankatatai petition condemning the farmers to collector Preambalur

பெரம்பலூர் கூட்டுறவு சங்கத்தில் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக கடன் வங்காததை கண்டித்து ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூர் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 13 மாதங்களாக விவசாயிகளுக்கு, கடன் வழங்கவில்லை என்றும், இது குறித்து விளக்கம் கேட்டால் செயலாளர் உள்ளிட்டவர்கள் முறையாக பதிலளிக்காமல் உள்ளனர்.

கரும்பு நிலுவைத் தொகை மற்றும், பயிர்க்கடன் உளளிட்ட பல்வேறு வகை கடன்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் ஊழல் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பு இருப்பதால் விசாரணை நடத்த வலியுறுத்தி முப்பதிற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு வந்து இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில மனு கொடுத்தனர்.


Copyright 2015 - © 2022 — Kaalaimalar | காலைமலர் . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for Tamil Daily News - Kalaimalar.

error: Content is protected !!