Coimbatore: Rakla Race at Kulathupalayam; furious Bulls!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஒன்றியம், குளத்துப்பாளையத்தில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. குளத்துப்பாளையம் – தேவணாம்பாளையம் ரோட்டில் ரேக்ளா பந்தயத்தில் 200 மீட்டர், 300 மீட்டர் தூரத்திற்கான பந்தயம் நடைபெற்றது.
பொள்ளாச்சி, பழனி, தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம், ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், நெகமம், சுல்தான்பேட்டை, செட்டியக்காபாளையம், நெ.10 முத்தூர், ஆலாந்துறை, ஒட்டன்சத்திரம், சாமராயபட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு ரேக்ளா பந்தயத்தில் இலக்கை நோக்கி சீறி பாய்ந்தன.
பந்தயத்தில் வெற்றி பெற்ற காளைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது. ரேக்ளா பந்தயத்தில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரேக்ளா பந்தயத்தை கண்டு ரசித்தனர்.